இந்தியாவில் தலை சிறந்த வெலிங்டன் ராணுவ பயிற்ச்சி கல்லூரியில், பயிற்சி முடித்த பன்னாட்டு ராணுவ முப்படை அதிகாரிகளுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ராணுவ பயிற்ச்சி கல்லூரி கமாடண்ட் மோகன் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையப் பகுதியில் பன்னாட்டு ராணுவத்தின் காலாட்படை, கப்பற்படை, விமானப்படை, அதிகாரிகள் பயிற்சி
பெறும் டிபன்ஸ் சர்வீஸ் ஸ்டாப் காலேஜ் கடந்த 1947 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தின் முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் மூலம் அந்தந்த நாட்டில் இங்கு பயிற்சி முடிந்து பட்டம் பெற்றவர்களுக்கு உயர் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.
சர்வதேச அளவில் சிறப்புப் பெற்ற இந்த ராணுவ பயிற்சி கல்லூரியின் 77ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு பட்டமும்,
சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு கேடயமும் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்சியில் ராணுவ பயிற்சி கல்லூரியின் முதல்வரும் கமாண்டன்டுமான மோகன் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் ராணுவ அதிகாரிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் இந்தியாவில் தலை சிறந்தது வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி என்று கல்லூரியின் முதல்வரும் கமாண்டன்டுமான, எஸ்.மோகன் பயிற்சி முடித்த பன்னாட்டு ராணுவ முப்படை அதிகாரிகளுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி கலந்து கொண்டபோது புகழாரம் சூட்டினாா்.