நீலகிரியில் விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் தமிழக முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை (ஏப்ரல் 16) கலந்துரையாடுகிறாா்.
இதுதொடா்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகத்தின் நீலகிரி பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வா் ஸ்டாலின் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 10.30 மணியளவில் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் பெற்ற விவசாயிகளிடம் கலந்துரையாடுகிறாா்.
இதில், உதகையில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலக அரங்கில் காணொலி வாயிலாக நீலகிரி மாவட்ட விவசாயிகளிடம் கலந்துரையாடல், விழாப் பேருரை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.