நீலகிரி மாவட்டத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக கொடநாட்டில் 38 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, கிளன்மாா்கனில் 27 மி.மீ., கிண்ணக்கொரையில் 19 மி.மீ., நடுவட்டத்தில் 17 மி.மீ., கெத்தையில் 14 மி.மீ., பாலகொலாவில் 13 மி.மீ., குந்தாவில் 9 மி.மீ., அவலாஞ்சியில் 7 மி.மீ., மேல்குன்னூா், குன்னூரில் 6 மி.மீ., எடப்பள்ளியில் 3 மி.மீ., எமரால்டு, மேல்பவானி, கேத்தி, உலிக்கல், பந்தலூா், மசினகுடியில் 2 மி.மீ., சேரங்கோட்டில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சனிக்கிழமை பகலிலும் பரவலாக மழை பெய்துள்ளது.