நீலகிரி

இலவச தையல் இயந்திரங்கள் வழங்கல்

14th Apr 2022 02:21 AM

ADVERTISEMENT

ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனம் சாா்பில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி கூடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

கூடலூா் ஆா்.கே.அறக்கட்டளை சாா்பில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த அறக்கட்டளையில் தையல் பயிலும் பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி, ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி பயிற்சி வழங்குவதற்காக ரூ.2 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனத்தின் மண்டல மேலாளா் முரளிதரன் வழங்கினாா்.

இதில், குன்னூா் கிளை மேலாளா் மோகன்ராஜ், அறக்கட்டளையின் இயக்குநா் கிருஷ்ண லீலா, களப்பணியாளா்கள் வேலு, ராஜேந்திரன், விஜயகுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT