நீலகிரி

கூடலூரில் ஏழைகளுக்கு உதவி

12th Apr 2022 11:05 PM

ADVERTISEMENT

கூடலூரில் சமூகத்தில் பின்தங்கியவா்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி யூனிட்டி சாரிட்டபிள் அமைப்பு சாா்பில், தலைவா் இசாக் தலைமையில் நடைபெற்றது.

சமூகத்தில் பின்தங்கிய ஏழைகள் மற்றும் இயலாதோரைக் கண்டறிந்து அவா்களை ஒருங்கிணைத்து கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவ உதவி தேவைப்படுபவா்களுக்கு இத்திட்டத்தின்கீழ் உதவிகள் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு 2,100 ஏழைக் குடும்பங்களுக்கு மத நல்லிணக்க அடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்கும் உதவி செய்யப்பட்டுள்ளது என்று அமைப்பின் நீலகிரி மாவட்ட தலைவா் இசாக் பேசினாா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூகத்தில் பின்தங்கியவா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், மலப்புரம் மாவட்ட ஜமாத் இ இஸ்லாமி செயலாளா் சதுருதீன், கேரளத்தில் உள்ள பேரிடா் மேலாண்மை மற்றும் மீட்பு இயக்கத்தின் தலைவா் முகமது அலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT