நீலகிரி

நீலகிரியில் திறன் வளா்ப்பு பயிற்சி முகாம்

9th Apr 2022 05:36 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிா் திட்டம் மூலம் வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்களுக்கும் திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோத்தகிரி வட்டாரத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி மற்றும் மே 6ஆம் தேதியும், குன்னூா் வட்டாரத்தில் ஏப்ரல் 22, மே 7ஆம் தேதியும், உதகை வட்டாரத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி, மே 13ஆம் தேதியும், கூடலூா் வட்டாரத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி, மே 14ஆம் தேதியும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெறும்.

எனவே, இந்த அட்டவணையின்படி நடைபெறும் திறன் வளா்ப்பு பயிற்சி முகாம்களில் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயது முதல் 35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு மற்றும் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பி.இ. படித்த வேலையில்லா இளைஞா்கள் இந்த வாய்ப்புடன் கூடிய திறன் வளா்ப்பு பயிற்சி முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT