நீலகிரி

திருக்கு ஒப்பித்தல் போட்டி:வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பரிசு

9th Apr 2022 05:36 AM

ADVERTISEMENT

திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியா் தலா ரூ. 10 ஆயிரம் பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

திருக்குறளில் உள்ள கருத்துகளைப் பள்ளி மாணவா்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவா்களாக விளங்கும் வகையில் திருக்குறள் பாராட்டுப் பரிசுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2019 - 2020ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி தமிழ் வளா்ச்சித் துறையால் கடந்த 2020 பிப்ரவரி 10ஆம் தேதி திறனறிக் குழு உறுப்பினா்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த சிஸ்டா் அல்போன்ஸா உயா்நிலைப் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி பா.ஹேமா ஸ்ரீ, 6ஆம் வகுப்பு மாணவி சீ.வைஷ்ணவி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

ADVERTISEMENT

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இரு மாணவியருக்கும் தலா ரூ. 10,000 பரிசுத் தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியின்போது, நீலகிரி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சம்சுதீன் உடனிருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT