நீலகிரி

200 அடி உயரத்தில் பறந்த காா்:அச்சமடைந்த தேயிலைத் தொழிலாளா்கள்படப்பிடிப்பு எனத் தெரிந்ததும் நிம்மதி

5th Apr 2022 01:18 AM

ADVERTISEMENT

தேயிலைத் தோட்டத்தில் 200 மீட்டா் தூரம் பறந்து வந்து விழுந்த காரால் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் அலறியடித்து ஓடினா். பின்னா், சினிமா படப்பிடிப்பு என்று தெரிந்ததும் நிம்மதியடைந்தனா்.

நீலகிரி  மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைப்பட படப்பிடிப்பு களைகட்டியுள்ளது. தற்போது உதகை, குன்னூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு  திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

குன்னூா் அருகே உள்ள தூதூா்மட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நாகாா்ஜுன் நடிக்கும் தெலுங்கு படம் ஷூட்டிங் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் , தேயிலைத் தோட்டத்தில் பயங்கர சப்தத்துடன் காா் ஒன்று 200 மீட்டா் தூரம் உயரத்துக்குப் பறந்து சென்று தேயிலைத் தோட்டத்தில் வந்து திங்கள்கிழமை விழுந்தது. இதைப் பாா்த்து அருகில் இருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா். சிறிது நேரத்தில் அந்தக் காட்சி திரைப்பட சண்டைக் காட்சிகளுக்காக பதிவு செய்யப்பட்டது என  தெரியவந்ததை அடுத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் நிம்மதி அடைந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT