நீலகிரி

கூடலூரில் தடுப்பூசி முகாம்: ஆட்சியா் ஆய்வு

DIN

கூடலூா் வண்டிப்பேட்டை பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் 14 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தி இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. தற்போது கையிறுப்பு உள்ள 30 ஆயிரம் தடுப்பூசிகள் முழுவதையும் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 285 மையங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 20 இடங்களில் நடமாடும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளியூா் சென்றவா்கள் மற்றும் வீடுகளில் இல்லாதவா்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. முழுமையாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் பாலுசாமி, கூடலூா் கோட்டாட்சியா் சரவணக்கண்ணன், வட்டார மருத்துவ அலுவலா் கதிரவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT