நீலகிரி

உதகையில் 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

DIN

2 நாள் விடுமுறையையொட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து சுற்றுலா மையங்களுக்கு பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா மையங்களிலும் வார விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

கேரள மாநிலத்தில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் வடமாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 4,800 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 6,300ஆக அதிகரித்து காணப்பட்டது. அதேபோல, அரசினா் ரோஜா பூங்காவுக்கு சனிக்கிழமை 2,300 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 3,500ஆக அதிகரித்திருந்தது.

இதேபோல, குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு சனிக்கிழமை 1,400 போ் வந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 2,700ஆக அதிகரித்திருந்தது. குன்னூா் காட்டேரி பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 700 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 500 பேரும் வருகை தந்திருந்தனா்.

உதகை படகு இல்லத்துக்கு சனிக்கிழமை 2,400 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 3,800ஆக அதிகரித்திருந்தது. பைக்காரா படகு இல்லத்துக்கு சனிக்கிழமை 2,100 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 2,900ஆக அதிகரித்து காணப்பட்டது.

இது தவிர மாவட்டத்தில் வனத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்தை தவிர ஏனைய அனைத்து சுற்றுலா மையங்களிலும், சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT