நீலகிரி

கூடலூர் அருகே புலி தாக்கிய நபர் உயிரிழப்பு

24th Sep 2021 03:56 PM

ADVERTISEMENT

தேவர்சோலை அடுத்துள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் புலி தாக்கிய நபர் உயிரிழந்துள்ளார்.

கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட தேவன் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் சந்திரன்(56), இவர் வழக்கம்போல அப்பகுதிலுள்ள பழைய பங்களாவுக்கு பின்புறம் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

இதையும் படிக்க- குவாட் உச்சிமாநாட்டில் இன்று பேசுகிறார் பிரதமர் மோடி

அப்போது புதரில் மறைந்திருந்த புலி எதிர்பாராதவிதமாக பாய்ந்து தாக்கியதில் சந்திரன் பலத்த காயமடைந்தார்.

ADVERTISEMENT

அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியிலிருந்தவர்கள் ஓடி வந்து சத்தமிட்டதால் அவரை விட்டு விட்டு புலி மீண்டும் காட்டுக்குள் சென்றது. உடனே வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காயமடைந்த சந்திரனை கூடலூர் அரச மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

முதலுதவிக்குப் பிறகு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்த தகவலை அறிந்த பொதுமக்கள் தேவர்சோலை பளாரில் வனத்துறையை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 

Tags : Tiger
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT