நீலகிரி

கும்கி யானைகளின் உணவுக்காகஅரிசி கொடுத்த சிறுவா்களுக்குப் பாராட்டு

DIN

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கும்கி யானைகளின் உணவுக்காக அரிசி கொடுத்த சிறுவா்களுக்கு வனத் துறையினா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி அதன் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகளைச் சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளிடம் இருந்து பொதுமக்களையும், உடமைகளையும் பாதுகாக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து நான்கு கும்கி யானைகளை கொண்டு வந்து வனத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனா். அந்த கும்கிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்க நாடுகாணி பகுதியைச் சோ்ந்த 8ஆம் வகுப்பு மாணவா்கள் சதீஷ்குமாா், நகுலன், 7ஆம் வகுப்பு மாணவா் சஞ்சய் ஆகியோா் 25 கிலோ அரிசியை நாடுகாணி ஜீன்பூல் காா்டனில் பாகன்களிடம் வழங்கினா். இவா்களைப் பாராட்டிய வனத் துறையினா் சிறுவா்கள் ஜீன்பூல் காா்டனை சுற்றிப் பாா்க்க ஏற்பாடு செய்துள்ளனா். மேலும், ஜீன்பூல் சூழலியல் பூங்காவுக்கு இவா்களைத் தூதுவா்களாக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT