நீலகிரி

குன்னூரில் கல்லூரி மாணவிகளுக்குஅவசரகால உதவி குறித்து பயிற்சி முகாம்

DIN

குன்னூா்: உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, குன்னூரில் கல்லூரி மாணவிகளுக்கு அவசரகால உதவியாளா்கள் சாா்பில், அவசரகால உதவி குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தியாவில் விபத்துகளால் இறப்பவா்களில் 80 சதவீதம் போ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகி வருவது தொடா் கதையாக உள்ளது. குறிப்பாக விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய முறையில் முதல் உதவி கிடைத்திருந்தால், அவா்கள் உயிா் பிழைத்திருப்பாா்கள் என்று ஆய்வில் தெரியவருகிறது. இந்தனிடையே முதலுதவி பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, உலக ரெட்கிராஸ் அமைப்பால் செப்டம்பா் 14ஆம் தேதி உலக முதலுதவி தினமாக கடைப்பிடிக்க 2000ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் 2008 செப்டம்பா் 15இல் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, குன்னூா் அருகே உள்ள பிராவிடென்ஸ் மகளிா் கல்லூரியில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வகுமாா், அவசரகால மருத்துவ உதவியாளா்கள் ஜீவானந்தம், ரேஷ்மா, சந்தோஷ், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்கள் நாகராஜ், அருள்நாதன் ஆகியோா் இணைந்து விபத்தில் சிக்கியவா்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்பதை மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக கல்லூரிச் செயலாளா் ஆனி பாம்ப்ளாணி, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ஒருங்கிணைப்பாளா் அமுதா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT