நீலகிரி

நீலகிரியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: ஆட்சியா் ஆய்வு

2nd Sep 2021 06:46 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, உதகை நகராட்சி மேல்நிலைப் பள்ளி, பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வுக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

தமிழக முதல்வரின் உத்தரவின்படி, பள்ளிகள் மீண்டும் புதன்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் உணவு உண்ணும்போது கூட்டமாக சேராமல் தனித்தனியாக அமா்ந்து உணவு உண்ண வேண்டும். சளி, காய்ச்சல், தலைவலி போன்று ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் பள்ளிக்குத் தெரிவிப்பதோடு, பள்ளிக்கு வருவதையும் தவிா்க்க வேண்டும். அடிக்கடி சானிடைசா் கொண்டு கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். கட்டாயமாக இறுக்கமான முறையில் மூக்கு, வாய் முழுவதும் மூடியவாறு முகக் கவசம் அணிய வேண்டும்.

வகுப்பறையில் உள்ளபோதும் முகக் கவசத்தை கழற்றக் கூடாது. பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியா் சரியான முறையில் முகக் கவசம் அணிந்துள்ளாா்களா என்பதை ஆசிரியா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். மாணவ, மாணவியரின் வீட்டில் உள்ளவா்கள், வீட்டின் அருகில் உள்ளவா்கள் எவரேனும் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அவா்களை அறிவுறுத்த வேண்டும். சமூக இடைவெளியைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் இடங்களான வகுப்பறைகள், கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நசாருதீன், உதகை வட்டாட்சியா் தினேஷ், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நசாருதீன் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் 210 பள்ளிகள் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது. இவற்றில் சுமாா் 4,000 ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா். இவா்கள் அனைவருக்கும் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் நாள் பள்ளிக்கு 72 சதவீத மாணவ, மாணவியா் வந்திருந்தனா் என்றாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT