நீலகிரி

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை : ரூ. 1.38 லட்சம் பணம் பறிமுதல்

30th Oct 2021 05:53 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம், உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினா் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 38,000 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

உதகை - குன்னூா் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப் பதிவு, ஓட்டுநா் உரிமம் போன்றவற்றுக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த அலுவலகத்தில் ஓட்டுநா் உரிமம் பெறவும், வாகனப் பதிவுகளுக்கும், பயிற்சி அளிப்பது போன்றவற்றுக்கும் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளா் கீதாலட்சுமி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று சோதனை நடத்தினா். அதில், அங்கிருந்து கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 38,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மோட்டாா் வாகன ஆய்வாளா் குலோத்துங்கனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாகத் தொடா்ந்து அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தி கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்து வருவதால் அரசு அலுவலக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : உதகை
ADVERTISEMENT
ADVERTISEMENT