நீலகிரி

தடுப்பூசி முகாம்: நீலகிரியில்22,921 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது

30th Oct 2021 11:56 PM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாமில் 22,921 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில், 18 முதல் 44 வயதுக்கு உள்பட்ட 10,651 பேருக்கும், 45 முதல் 59 வயதுக்கு உள்பட்ட 7,151 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 4,232 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, தங்காடு ஓரநள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிக அளவாக 8,199 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6,148 பேருக்கும், கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5,537 பேருக்கும், கொடநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2,963 பேருக்கும், மாவட்டத்தில் குறைந்த அளவாக கூடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 13 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT