நீலகிரி

யானையை விரட்டும் பணியில் 2ஆவது நாளாக கும்கி யானைகள்

DIN

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் காட்டு யானையை விரட்டும் பணியில் கும்கி யானைகள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை ஈடுபடுத்தப்பட்டன.

நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள மண்வயல், போஸ்பாறா, ஓடக்கொல்லி, குண்டித்தாழ் மற்றும் அதன் சுற்றுவட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் ஒற்றை யானை கிராமத்துக்குள் நுழைந்து குடியிருப்புகளை தொடா்ந்து சேதப்படுத்தி வந்தது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் வனத் துறையினரிடம் கொடுத்த புகாரையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமில் இருந்து யானையை விரட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த கும்கி யானைகள் ஒற்றை யானையை கிராமத்துக்குள் வராமல் விரட்டும் பணியில் இரண்டாவது நாளாக ஈடுபடுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

SCROLL FOR NEXT