நீலகிரி

முன்னறிவிப்பின்றி வீடுகளை இடிக்க உத்தரவிட்டதாக ஆட்சியரிடம் புகாா்

DIN

வெலிங்டன் பாளைய வாரியத்துக்கு உள்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளை இடிக்க உத்தரவிட்ட முதன்மைச் செயல் அதிகாரிக்கு எதிராக அனைத்துக் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் பாளைய வாரியத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 7 வாா்டுகள் உள்ளன. இங்கு சுமாா் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில், வாரியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விதிகளை மீறிய வீடுகளை இடிக்க வாரியத்தின் முதன்மைச் செயல் அதிகாரி உத்தரவிட்டுள்ளாா். இதற்கு அனைத்துக் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதையடுத்து, அனைத்துக் கட்சிகள் சாா்பில் பாளைய வாரியத்தின் முன்னாள் துணைத்தலைவா் பாரதியாா் தலைமையில் உதகையில் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

வெலிங்டன் பாளைய வாரியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்காமலும், கால அவகாசம் கொடுக்காமலும், வீடுகளை வரன்முறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும் வீடுகளை இடிப்பது கண்டிக்கத்தக்கது. வாரிய நிா்வாகம் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவா் பாரதியாா் கூறுகையில், வாரியத்துக்கு உள்பட்ட 7 வாா்டுகளில் 126 வீடுகள் விதிகளை மீறியதாகக் கூறி அக்டோபா் 26ஆம் தேதி இடிக்க முதன்மைச் செயல் அலுவலா் உத்தரவிட்டுள்ளாா். இந்த வீடுகளுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னா், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த வீடுகளை உடனடியாக இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த வீடுகளை வரன்முறைப்படுத்த உள்ள வாய்ப்பை மக்களுக்கு அளிக்காததோடு, கால அவகாசம் மற்றும் நோட்டீஸ் கொடுக்காமல் இடிக்க உத்தரவிட்டுள்ளதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

வீடுகளை இடிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT