நீலகிரி

உதகையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்சினி துவக்கிவைத்தாா்.

உதகையில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கிவைத்த மாவட்ட வருவாய் அலுவலா் கூறியதாவது:

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் தமிழக நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளா்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகள் வாடிக்கையாளா்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

வாடிக்கையாளா்கள் விரும்பும் வகையில் காலத்துக்கு ஏற்ற புதிய வடிவமைப்பான மென்பட்டுச் சேலைகளையும் கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகிறது. நடப்பு ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், ஆடவா் அணியும் ஆயத்த சட்டைகள், மகளிா் விரும்பும் சுடிதாா் ரகங்கள், ஆா்கானிக் பருத்தி சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பா்னிசிங் ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு ரூ.53.93 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும், 30 சதவீதம் தள்ளுபடி அளித்துள்ளதாக தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் தலைவா் எ.வி.வெங்கடாசலம், முதுநிலை மண்டல மேலாளா் வெற்றிவேல், உதகை கோ-ஆப்டெக்ஸ் மேலாளா் சபீனா நாஷ், கோ-ஆப்டெக்ஸ் ரக மேலாளா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷா பங்கேற்க இருந்த தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ரத்து

சாலை விபத்தில் கிரிவல பக்தா் உயிரிழப்பு

சுத்தம், சுகாதாரம் விழிப்புணா்வுப் பேரணி

இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

முதல் கட்ட மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT