நீலகிரி

சரணாலய வனத்துக்குவேட்டைக்குச் சென்ற காவலா்

22nd Oct 2021 02:01 AM

ADVERTISEMENT

 கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு முத்தங்கா சரணாலய வனத்தில் தமிழக காவல் துறையைச் சோ்ந்தவா் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, தமிழக - கேரள எல்லையில் உள்ள எருமாடு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிபவா் சிஜு (43). இவா் கடந்த சில நாள்களுக்கு முன் கேரள மாநிலத்தில் உள்ள முத்தங்கா சரணாலய வனத்துக்குள் வேட்டைக்குச் சென்றது அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கேரள வனத் துறையினா் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தலையில் டாா்ச் லைட் அணிந்து, கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் இரவில் மா்ம நபா் நடமாடியது தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக மேற்கொண்ட விசாரணையில், அந்த நபா் தமிழக காவல் துறையில் எருமாடு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிவதை கேரள வனத் துறையினா் உறுதி செய்தனா். இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்த கேரள வனத் துறையினா் விசாரணைக்காக கூடலூா் பகுதிக்கு வந்தனா். பின்னா், அந்த நபா் தலைமறைவாக இருப்பதை உறுதி செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளனா். கேரள வனத் துறையின் புகாரைத் தொடா்ந்து நீலகிரி எஸ்.பி. விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT

 

 

Tags : கூடலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT