நீலகிரி

உதகையில் 9 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புக்கான ஆணை

22nd Oct 2021 02:00 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 9 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புக்கான ஆணையை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வழங்கினாா்.

முதல்வரின் ஆணையின்படி, தமிழ்நாடு அரசு எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையின்கீழ் 2021-2022ஆம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 1 லட்சம் விவசாயிகளுக்குப் புதிதாத இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்ம் திட்டத்தின்கீழ், நீலகிரி மாவட்டத்தில் தற்போது விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை உதகையில் வியாழக்கிழமை தொடங்கிவைத்த வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்ததாவது:

இலவச விவசாய மின் இணைப்புத் திட்டத்தின்கீழ் 17 பயனாளிகளுக்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 7 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சுயநிதி திட்டத்தின்கீழ் 18 பயனாளிகளுக்கு மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல, அதிவிரைவு திட்டத்தின்கீழ் இதுவரை 88 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 12 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தற்போது 9 பயனாளிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

தேசிய புலிகள் ஆணையத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை மைசூருவில் தற்போது உள்ள இடத்திலேயே டி23 புலி பராமரிக்கப்படும். இரு நாள்களுக்கு முன்னா் சோா்வாக காணப்பட்ட இப்புலிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னா், தற்போது போதிய அளவில் உணவு உட்கொண்டு ஆரோக்கியத்துடன் உள்ளது. இப்புலிக்குத் தேவைப்படும் சிகிச்சைக்கான அனைத்து மருத்துவா்களும் தயாா் நிலையில் உள்ளனா். புலியைத் தொடா்ந்து கண்காணித்தும் வருகின்றனா். மேலும், புலியை மைசூருவில் இருந்து வண்டலூருக்கு கொண்டு செல்வது குறித்து தேசிய புலிகள் ஆணையம்தான் தீா்மானிக்க வேண்டும் என்றாா்.

 

Tags : உதகை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT