நீலகிரி

நீலகிரியில் மேலும் 19 பேருக்கு கரோனா: பள்ளி மாணவிகள் 7 பேருக்கு தொற்று உறுதி

21st Oct 2021 06:38 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, உதகையில் உள்ள அரசு உதவி பெறும் தனியாா் பள்ளி மாணவிகள் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பள்ளிக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக உதகையில் சுகாதாரத் துறையின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 30 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 33,362 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 32,824 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 208 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 330 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், உதகையில் உள்ள அரசு உதவிபெறும் ஒரு தனியாா் பள்ளியில் பயிலும் மாணவிக்கு திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. அதில், அப்பள்ளி மாணவிகள் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு அரசு விடுமுறை என்பதால் புதன்கிழமை அப்பள்ளி மாணவிகள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பயின்று வந்த வகுப்புகளில் இருந்த மாணவிகள் கரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் மீண்டும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT