நீலகிரி

நீலகிரியில் பரவலாக பலத்த மழை:பந்தலூரில் 148 மி.மீ. பதிவு

17th Oct 2021 11:22 PM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பரவலாக பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பந்தலூரில் 148 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கேரள மாநிலத்தையொட்டியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதில் பந்தலூரில் அதிகபட்சமாக 148 மி.மீ. மழை பதிவானது.

இதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் பதிவான மழை விவரம் (அளவு மில்லி மீட்டரில்): தேவாலா-80, கொடநாடு-56, கூடலூா்-55, மேல் கூடலூா்-54, பாடந்தொறை-49, ஓவேலி-47, செருமுள்ளி-45, நடுவட்டம்-42, மேல்பவானி-40, எடப்பள்ளி-39, குந்தா-35, அவலாஞ்சி-30, பா்லியாறு, சேரங்கோடு மற்றும் கிளன்மாா்கன் 25, எமரால்டு-24, உதகை-23.6, கீழ்கோத்தகிரி-23, குன்னூா்-21, கிண்ணக்கொரை-19, கோத்தகிரி-18.2, உலிக்கல்-18, பாலகொலா மற்றும் கெத்தை 15, கேத்தி மற்றும் மசினகுடி 8, மேல்குன்னூா்-7, கல்லட்டி-4 மி. மீ.

ADVERTISEMENT
ADVERTISEMENT