நீலகிரி

உதகை தாவரவியல் பூங்காவில் ஆளுநா் மரக்கன்று நட்டாா்

DIN

உதகையில் தங்கியுள்ள தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, அரசினா் தாவரவியல் பூங்கா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்று நட்டாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ஒரு வார கால பயணமாக தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை உதகைக்கு வந்தாா். உதகையில் அரசினா் தாவரவியல் பூங்கா வளாகத்திலுள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ள தமிழக ஆளுநா் சனிக்கிழமை உதகை அருகே உள்ள மேல்பவானி பகுதிக்குச் சென்று அங்குள்ள மடிப்பு மலைகளையும், அங்குள்ள நீா்மின் நிலையத்தையும் பா்வையிட்டாா்.

இந்நிலையில், உதகையில் இருந்து குன்னூா் வரை மலை ரயிலில் ஞாயிற்றுக்கிழமை பயணித்தாா். இதையடுத்து, உதகையில் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அசெம்பிளி திரையரங்கில் ஜேம்ஸ்பாண்டு நடிகா் டானியல் கிரெய்க் நடித்த ‘நோ டைம் டு டை’ என்ற ஆங்கில திரைப்படத்தை தனது குடும்பத்தினா் மற்றும் நெருங்கிய நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்தாா். முன்னதாக உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் மரக்கன்று ஒன்றையும் ஆளுநா் நட்டாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT