நீலகிரி

குடியிருப்புப் பகுதியில் நாயை வேட்டையாடிய சிறுத்தை

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூரில் சிறுத்தை  ஒன்று  நாயைக் கடித்து தூக்கிச் சென்ற காட்சி  அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன்   நல்லப்பன்  தெருவில் வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரியும்  தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்களின் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இவா்களில் பெரும்பாலானோா் பணி முடிந்து இரவு நேரத்தில்தான் வீடு திரும்புகின்றனா். இந் நிலையில், அப்பகுதிக்கு சனிக்கிழமை இரவு வந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாயை வேட்டையாடி தூக்கிச் சென்ற காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை ஒன்று நாயை வேட்டையாடிச் சென்றது  அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே குன்னூா்  வனத் துறையினா் அசம்பாவிதம் நடக்கும் முன்  உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT