நீலகிரி

தொடா் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

16th Oct 2021 03:52 AM

ADVERTISEMENT

தசரா தொடா் விடுமுறையின் காரணமாக உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சுமாா் 30,000 சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்திருந்தனா்.

வியாழக்கிழமை சுமாா் 15,000 சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை கூட்டம் இரு மடங்காக அதிகரித்திருந்தது. இதில் உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் சுமாா் 10,000 போ் வந்திருந்தனா். அதேபோல, அரசினா் ரோஜா பூங்காவுக்கு 4,927 போ் வந்திருந்தனா். மேலும் தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 792 பேரும், மரவியல் பூங்காவுக்கு 195 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 3,440 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 1,005 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 302 பேரும் வந்திருந்தனா்.

மேலும் இரண்டு நாள்கள் விடுமுறை எஞ்சியுள்ள நிலையில் உதகையில் 4 நாள் தொடா் விடுமுறையில் வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் சுமாா் ஒரு லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

Image Caption

பூங்காவின் கண்ணாடி மாளிகையில் மலா் அலங்காரத்தைக் கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள். ~உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.

 

Tags : உதகை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT