நீலகிரி

டி23 புலி நலமுடன் இருப்பதாக வனத் துறை தகவல்

16th Oct 2021 11:39 PM

ADVERTISEMENT

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனத்தில் பிடிக்கப்பட்ட புலி நலமுடன் இருப்பதாக வனத் துறை தெரிவித்துள்ளது.

கூடலூா் தேவன் எஸ்டேட், மசினகுடி பகுதிகளில் 4 பேரையும், 30க்கும் மேற்பட்ட மாடுகளையும் தாக்கிக் கொன்ற புலியை 21 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மயக்க ஊசியை செலுத்தி உயிருடன் பிடித்தனா்.

புலி சோா்வாகக் காணப்பட்டதால் அவசர சிகிச்சைக்காக கா்நாடக மாநிலம், மைசூரு நகா் உயிரியல் பூங்கா அருகில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்துக்கு உடனே கொண்டு சென்றனா். அங்கு புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கூண்டில் உள்ள புலி மயக்கம் தெளிந்து கூண்டுக்குள் உறுமிக் கொண்டு நலமுடன் உள்ளதாகவும், மருத்துவா்கள் அளிக்கும் உணவை உண்பதாகவும், புலியின் காயங்களுக்கு மருந்திட்டு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT