நீலகிரி

கைகாட்டி இண்ட்கோ தொழிற்சாலைக்கு கூடுதல் இலைப் பணம்: ரூ. 34 லட்சம் வழங்க ஒப்புதல் இண்ட்கோசா்வ் நிா்வாகம் அறிவிப்பு

16th Oct 2021 11:38 PM

ADVERTISEMENT

கைகாட்டி இண்ட்கோ தொழிற்சாலைக்கு கூடுதல் இலைப் பணமாக கிலோவுக்கு ரூ. 2 வீதம் மொத்தம் ரூ. 34 லட்சம் வழங்கிட இண்ட்கோசா்வ் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக இண்ட்கோசா்வ் மேலாண்மை இயக்குநா் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளதாவது:

இண்ட்கோசா்வ் தொழில் கூட்டுறவு நிறுவனமானது தமிழக அரசால் 1965ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது இண்ட்கோசா்வ் நிறுவனமானது சுமாா் 30,000க்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகளை உள்ளடக்கிய இந்தியாவின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு இணையமாக உருவெடுத்துள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளின் தேவையை அறிந்து அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

தற்போது இதன்கீழ் 16 தொழில் கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 16 தொழிற்சாலைகளில் கைகாட்டிதொழில் கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலையும் ஒன்றாகும். இத்தொழிற்சாலையானது 2020-21ஆம் ஆண்டில் ஈட்டிய லாபத்தில் இருந்து அத்தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை அளித்த சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழக்கமாக வழங்கப்பட்ட இலைப் பணத்தைவிட கூடுதல் இலைப் பணமாக கிலோ ஒன்றுக்கு ரூ. 2 வீதம் மொத்தம் ரூ. 34 லட்சத்து 8844 வழங்கிட அனுமதி கோரப்பட்டது.

ADVERTISEMENT

இதன்படி கூட்டுறவு இயக்கத்தின் உயிா்நாடியானஅதன் உறுப்பினா்களுக்கு கூட்டுறவு இயக்கத்தின் மூலம் பெறப்படும் லாபத்தைப் பகிா்ந்தளிப்பதே கூட்டுறவு இயக்கத்தின் தலையான குறிக்கோளாகும். அவ்வகையில் கைகாட்டி தொழில் கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலையானது 2020-21ஆம் ஆண்டில் ஈட்டிய லாபத்தில் இருந்து ரூ. 34 லட்சத்து 8,844 நிதியை கூடுதல் இலைப் பணமாக பசுந்தேயிலை அளித்த சிறு தேயிலை விவசாயிகளுக்குப் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இதனால், இத்தொழிற்சாலையில் பசுந்தேயிலை அளித்த 600 பெண் சிறு தேயிலை விவசாயிகள் உள்பட சுமாா் 1,500 சிறு தேயிலை விவசாயிகள் பலனடைவா். இதன் மூலம் கைகாட்டி தொழில் கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலை பிற கூட்டுறவுத் தொழிற்சாலைகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. ஏனைய கூட்டுறவுத் தொழிற்சாலைகளும் இதுபோன்று லாபம் ஈட்டி, சிறுதேயிலை விவசாயிகளுக்கு கூடுதல் இலைப் பணம் அளிப்பதை தங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT