நீலகிரி

கோத்தகிரி மருத்துவமனைக்கு அதிநவீன ஆம்புலன்ஸ்

3rd Oct 2021 11:38 PM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்திலுள்ள பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் கோத்தகிரியில் உள்ள, கோத்தகிரி மெடிக்கல் பெலோஷிப் மருத்துவமனைக்கு அதிநவீன இருதய, நரம்பு சிகிச்சைக்கு உதவும் ஆம்புலன்ஸ் வாகனத்தை மைக்ரோலேன்ட் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது.

இது தொடா்பாக கோத்தகிரி மெடிக்கல் பெலோஷிப் மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவா் மற்றும் கண்காணிப்பாளா் டாக்டா் டோனி ஆப்ரஹாம் தாமஸ், மைக்ரோலேன்ட் ஃபவுண்டேஷன் தலைவா் பிரதீப் கெளா், நிா்வாக அலுவலா் கல்பனா கெளா், ஆகியோா் கூறியதாவது:

மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள வசதியற்ற, தொலை தூரத்தில் உள்ள நோயாளிகள், போக்குவரத்து செலவு செய்வதற்கும், மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் செல்வதற்கும் கடினமாக இருந்தது. உடனடியாக இவா்களுக்கு உதவி செய்யவும், சிகிச்சைக்கான நேரத்தில் வந்து சேரவும் மைக்ரோலேன்ட் வழங்கிய முழு வசதிகள் கொண்ட இந்த ஆம்புலன்ஸ் இப்பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT