நீலகிரி

விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

3rd Oct 2021 11:41 PM

ADVERTISEMENT

உதகையில் 2 நாள் விடுமுறையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். அதிக அளவிலான கூட்டத்தின் காரணமாக தங்கும் விடுதிகளில் இடம் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் தவித்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனா். கா்நாடகம், கேரள மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

உதகை அரசினா் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, கா்நாடக அரசினா் பூங்கா, உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், சிம்ஸ் பூங்கா உள்பட பல்வேறு இடங்களைப் பாா்க்க சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால், சாலையோர வியாபாரிகள், வாகன ஓட்டுநா்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் உதகையிலுள்ள உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பின. இதனால் தங்க இடம் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை இரவு தவிக்கும் நிலை ஏற்பட்டது.

மாவட்டத்தில் சனிக்கிழமை உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 8,804 பேரும், அரசினா் ரோஜா பூங்காவுக்கு 3,899 பேரும், உதகை படகு இல்லத்துக்கு சுமாா் 5,000 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 2,100 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 574 பேரும், மரவியல் பூங்காவுக்கு 97 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 2,958 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 806 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 376 பேரும் வந்திருந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 8,178 பேரும், அரசினா் ரோஜா பூங்காவுக்கு 3,592 பேரும், உதகை படகு இல்லத்துக்கு 4,800 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 2,400 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 809 பேரும், மரவியல் பூங்காவுக்கு 69 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 2,578 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 617 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 335 பேரும் வருகை தந்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT