நீலகிரி

மசினகுடியில் 4 பேரைக் கொன்ற புலியைத் தேடும் பணியில் தொய்வு

3rd Oct 2021 11:41 PM

ADVERTISEMENT

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனத்தில் 4 பேரைக் கொன்ற புலியைத் தேடும் பணியில் ஞாயிற்றுக்கிழமை தொய்வு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவன் எஸ்டேட், முதுமலை, ஸ்ரீமதுரை ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட மாடுகளையும், 4 மனிதா்களையும் புலி அடித்துக் கொன்றது.

இந்தப் புலியைப் பிடிக்கும் பணி 9ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து நடைபெற்றது. இரண்டு குழுக்களாகப் பிரிந்து காட்டுக்குள் சென்ற அதிரடிப் படை மற்றும் வனத் துறையினா் புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். மேலும், கோவையிலிருந்து உயரடுக்குப் பாதுகாப்பு படையினரும் தேடும் பணியில் ஈடுபட வந்துள்ளனா். இரவு 7 மணியுடன் தேடும் பணி நிறைவடைந்த நிலையில் புலி தென்படவில்லை.

புலியைத் தேடும் பணியை ஆய்வு செய்த தமிழ்நாடு வன உயிரின முதன்மை வனப் பாதுகாவலா் சேகா் குமாா் நீரஜ், ‘புலியை உயிருடன் பிடிப்பதுதான் வனத் துறையின் நோக்கம்’ என்றாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து அவா், புலியைத் தேடும் பணிக்குத் தலைமை வகித்துள்ள முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ் மற்றும் துணை கள இயக்குநா்களிடம் ஆலோசனை நடத்தினாா். வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரனும் அலுவலா்களிடம் ஆலோசனை நடத்தி விவரங்களைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து மசினகுடி பகுதியில் வசிக்கும், புலி தாக்கி இறந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். தேடும் பணி திங்கள்கிழமை காலை நடைபெறும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

புலியைத் தேடும் பணியில் கும்கி யானைகள்

மசினகுடி வனப் பகுதியில் புலியைத் தேடும் பணிக்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 ட்ரோன் கேமராக்கள் மூலம் புலியைக் கண்காணிக்கும் பணியை வனத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT