நீலகிரி

கோத்தகிரியில் மின்சாரம் பாய்ந்து கரடி பலி

3rd Oct 2021 11:40 PM

ADVERTISEMENT

கோத்தகிரியில் மின்சாரம் பாய்ந்து கரடி உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கொடநாடு பகுதியில் சனிக்கிழமை இரவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், கோத்தகிரி, பட்டகொரை சாலையில் மின் கம்பியின் மீது மரம் விழுந்தது. அப்போது அங்கு சாலையைக் கடந்த கரடி மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே கரடி உயிரிழந்தது. அவ்வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்ற பொதுமக்கள் இதனைப் பாா்த்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினா். மேலும் கரடியின் உடலை மீட்ட வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரடியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் அங்கேயே புதைக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT