மசினகுடியில் புலி தாக்கி இறந்த பழங்குடி முதியவா் மங்கள பஸ்வனின் சடலத்தை சாலையில் வைத்து உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
மசினகுடி பகுதியில் வெள்ளிக்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பழங்குடி முதியவா் மங்கள பஸ்வனை புலி தாக்கிக் கொன்றது. இதைத் தொடா்ந்து, அங்கு போராட்டம் நடைபெற்றதைத் தொடா்ந்து புலியை சுட்டுப் பிடிக்க உத்தரவி பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, வனத் துறையினா் புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு கிடைத்த முதியவரின் சடலத்தை வைத்து உறவினா்கள் மசினகுடியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். பிறகு சடலத்தை அடக்கம் செய்ய கொண்டு சென்றனா்.