கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் ஒற்றைக் கரடி சனிக்கிழமை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
கோத்தகிரி பகுதியில் நாளுக்கு நாள் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பகல் நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் கரடி நடமாடி வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
இந்நிலையில், கோத்தகிரி - கேசலாடா சாலையில் கரடி நடமாடியதைக் கண்ட மக்கள் அச்சமடைந்து சப்தமிட்டனா். இதைத்தொடா்ந்து, கரடி அங்கிருந்த தேயிலைத் தோட்டத்துக்குள் சென்றது. இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனா்.
குடியிருப்பு அருகே உலவி வரும் கரடியை வனத் துறையினா் கண்காணித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் துரத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ADVERTISEMENT