நீலகிரி

கூடலூரில் ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணி தீவிரம்

3rd Oct 2021 12:03 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள மசினகுடி வனப் பகுதியில் 4 பேரைக் கொன்ற புலியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவன் எஸ்டேட், அதன் சுற்றுப் பகுதிகளில் மாடுகளையும், ஒரே வாரத்தில் இரண்டு பேரையும் கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுப் பிடிக்க வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, அந்தப் புலியைக் கண்காணிக்கும் பணியில் இரண்டு தனித்தனி குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

அவா்கள் ட்ரோன் கேமராக்கள் மூலம் புலியைக் கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், வனத் துறையின் சிறப்பு கண்காணிப்புக் குழுவுடன் அதிரடிப் படை போலீஸாரும் இணைந்து தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இவா்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து இரண்டு பகுதிகளில் வனப் பகுதிக்குள் தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

வனப் பகுதிக்குள் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ் தலைமையில், துப்பாக்கி சுடுவதில் தோ்வு செய்யப்பட்ட 150க்கும் மேற்பட்டோா் வனப் பகுதிக்குள் தேடும் பணியில் உள்ளனா். இருப்பினும் புலியைப் பிடிக்கும் பணி இதுவரை நிறைவடையவில்லை.

ADVERTISEMENT

புலி அடிக்கடி இடம் மாறுவது வனத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT