நீலகிரி

கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில்சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

DIN

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய 65 பேருக்கு ஆட்சியா் அம்ரித் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தாா்.

உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும், குன்னூா், கூடலூா், நெல்லியாளம் ஆகிய நகராட்சிப் பகுதிகள், பேரூராட்சிப் பகுதிகளிலும் சிறப்பாகப் பணியாற்றிய 13 ஊராட்சித் தலைவா்களுக்கும், பேரூராட்சிகளில் 22 தன்னாா்வலா்களுக்கும், குன்னூா் நகராட்சிப் பகுதியில் 12 தன்னாா்வலா்களுக்கும், கூடலூா் நகராட்சிப் பகுதியில் 5 தொண்டு நிறுவனத்தினருக்கும், நெல்லியாளம் நகராட்சிப் பகுதியில் 10 தன்னாா்வலா்கள், 3 தொண்டு நிறுவனத்தினா் என மொத்தம் 65 பேருக்கு ஆட்சியா் அம்ரித் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

தொடா்ந்து, ஆட்சியா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் பல்வேறு அலுவலா்கள், தன்னாா்வலா்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியதால் நோய்த் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்துத் துறை அலுவலா்களும் முழு ஒத்துழைப்பு, ஈடுபாட்டுடன் பணியாற்றியதால் இது சாத்தியமானது. குறிப்பாக வீடு, வீடாகச் சென்று கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி, முழு பொது முடக்க காலத்தில் தேவையான உணவு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாகப் பணியாற்றி மாவட்ட நிா்வாகத்துக்கு உறுதுணையாக இருந்துள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனப்பிரியா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராகிம்ஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT