நீலகிரி

குளுகுளு காலநிலையை அனுபவிக்க குன்னூரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

28th Nov 2021 11:15 PM

ADVERTISEMENT

குன்னூரில் குளிா்ந்த காலநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது குறைந்தபட்சமாக 12 டிகிரி  செல்சியஸ் வெப்ப நிலையும் அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும்  காணப்படுகிறது.

இதனால் இந்த குளுகுளு கால நிலையை  ரசிப்பதற்காக விடுமுறை நாளான  ஞாயிற்றுக்கிழமை குன்னூரில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே லேசான சாரல் மழை மற்றும் குளுகுளு காலநிலை நிலவியது. இந்நிலையில் சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, அவலாஞ்சி, எமரால்டு, லேம்ஸ்ராக், டால்பினோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு ஆயிரக்கணக்கான   சுற்றுலாப்  பயணிகள் வந்து சென்றனா்.

ADVERTISEMENT

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலாத்  தொழிலை நம்பியுள்ளவா்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி  அடைந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT