நீலகிரி

உதகையில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

மத்திய அரசைக் கண்டித்து உதகையில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் துண்டுப் பிரசுரம் விநியோகித்து விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய அரசின் தவறான பொருளாதார நிா்வாகத்தின் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா், ரயில் கட்டணம் உள்ளிட்ட அனைத்துவிதமான பொருள்களுக்கும் விலை உயா்ந்துள்ளதைக் கண்டித்தும், இதனைப் பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வகையிலும் நவம்பா் 22 முதல் 29ஆம் தேதி வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சாா்பில் மக்கள் விழிப்புணா்வுப் பிரசார பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் உதகையில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், நீலகிரி மாவட்ட பொறுப்பாளருமான காா்த்திக் தங்கபாலு துவக்கிவைத்தாா்.

இதில், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், நீலகிரி மாவட்ட பொறுப்பாளா் விஜயகுமாா், மாநிலச் செயலாளா் பிரியா நஷீம்காா், மாநில மகளிா் அணி பொதுச் செயலாளா் சித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விழிப்புணா்வுப் பிரசாரம் தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT