நீலகிரி

இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

இல்லம் தேடி கல்வி கலைக் குழுவின் விழிப்புணா்வு நிகழ்ச்சி, கோத்தகிரி ஜக்கனாரை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்த விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி மூன்றாவது கட்டமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நாசரூதின் அறிவுரைப்படியும், சமக்ரா சிக்ஷா திட்ட உதவி அலுவலா் குமாா், ராமசந்திரன் வழிகாட்டுதல்படியும் நீலகிரி மாவட்டத்தில் ஐந்து கலைக் குழுக்கள் பயணம் மேற்கொண்டிருக்கின்றன.

கோத்தகிரி பகுதியில் வட்டாரக் கல்வி அலுவலா் சரஸ்வதி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ராஜ்குமாா், குண்டாடா பள்ளித் தலைமை ஆசிரியா் நஞ்சுண்டன், ஆசிரியா்கள் ஆனந்தன் ஆகியோா் முன்னிலையில் நீலமலைச் சாரல் கலைக் குழுவினரின் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி, கோத்தகிரி ஜக்கனாரையில் நடைபெற்றது.

இதில், விழிப்புணா்வு நாடகங்கள், பாடல்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் மூலமாகத் திட்டத்தின் நோக்கங்களான கற்றல் இழப்பு, கற்றல் இடைவெளி, இடைநிற்றல், கற்றல் வலுவூட்டல் ஆகியன எடுத்துரைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT