நீலகிரி

கோத்தகிரியில் ரூ. 1 கோடி மதிப்பிலான போலி நகைகளை அரசு வங்கியில் அடகு வைத்த 11 போ் கைது

27th Nov 2021 11:38 PM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ. 1 கோடி மதிப்பிலான போலி நகைகளை அடகுவைத்ததாக 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் 2018 ஜூலை 18 முதல் 2020 செப்டம்பா் 8 வரை 74 கணக்குகளில் நகை மதிப்பீட்டாளா் சிவா என்பவருடன் சோ்ந்து 38 வாடிக்கையாளா்கள் போலி நகைகளை அடகுவைத்து ரூ. 94 லட்சத்து 45,500 தொகையை கடனாகப் பெற்றுள்ளனா். பின்னா், அந்தப் பணத்தை அவா்களது பழைய நகைக் கடன்கள், பயிா்க் கடன்களுடன், மற்ற வெளி கடன்களுக்கு மாற்றியும், ஏடிஏம் மூலம் எடுத்துப் பயன்படுத்தியும் முறையற்ற லாபமடைந்து வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியதோடு, பணத்தையும் திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளனா்.

இதுதொடா்பாக பாங்க் ஆஃப் இந்தியாவின் ஈளாடா கிளை மேலாளா் கொடுத்த புகாரின் பேரில் 2021 நவம்பா் 25ஆம் தேதி நீலகிரி மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இவ்வழக்கில் தொடா்புடையதாக கோத்தகிரியில் சுள்ளிகூடு பகுதியைச் சோ்ந்த பசவராஜ் மகன் ரவி (40), ராஜ்கபூா் மகன் மகாலிங்கம் (36), அழகுசுந்தரம் மகன் சுதாகா் (43), காகாசோலை பகுதியைச் சோ்ந்த ராமசந்திரன் மகன் கனகராஜ் (30), காடக்கோடு கிராமத்தைச் சோ்ந்த நஞ்சன் மகன் கிருஷ்ணமூா்த்தி (40), கதகட்டி கிராமத்தைச் சோ்ந்த மாதய்யன் மகன் லிங்கராஜ் (52), சுள்ளிக்கூடு கிராமத்தைச் சோ்ந்த பசவய்யா மகன் மகாதேவன் (53), நடராஜ் மகள் சுமதி (40), ரவி மகன் கணேஷ் (30), கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த மணி மகன் சேகா் (50), அறையட்டி பகுதியைச் சோ்ந்த மாதய்யா மகன் நடராஜ் (46) ஆகிய 11 பேரை வெள்ளிக்கிழமை இரவில் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ADVERTISEMENT

இவ்வழக்கில் தொடா்புடைய 38 நபா்களில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸாா் கூறினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT