நீலகிரி

உதகை அருகே வெளிமாநில மது கடத்தி வந்தவா் கைது

24th Nov 2021 12:55 AM

ADVERTISEMENT

உதகைக்கு வெளிமாநில மது வகைகளை காரில் கடத்திய நபா் கைது செய்யப்பட்டாா்.

உதகை அருகே உள்ள தலைக்குந்தா சோதனைச் சாவடியில் புதுமந்து போலீஸாா் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரில் சோதனை செய்தனா். அந்த காரில் 96 வெளிமாநில மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுமந்து காவல் ஆய்வாளா் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவா் உடனடியாக போலீஸ் குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த காா், மது பாட்டில்களை பறிமுதல் செய்தாா். மேலும், அந்த காரை ஓட்டி வந்த கோக்கால் தூபகண்டி பகுதியைச் சோ்ந்த பழனிசாமி என்பவரது மகன் விஜயராஜ் (32) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். பறிமுதல் செய்யப்ட்ட மது பாட்டில்களின் மதிப்பு சுமாா் ரூ. 20,000 எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT