கோத்தகிரியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை அதிகரித்து வருவதாகவும், வாடிக்கையாளா்களின் கைப்பேசி மூலம் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் உத்தரவின்பேரில் குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.
அப்போது, கோத்தகிரி பேருந்து நிலையம் அருகே தையலகம் நடத்தி வரும் சந்திரன் (54) என்பவா் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுரேஷைக் கைது செய்தனா்.