பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் உள்ள காப்புக் காட்டுக்குள் திங்கள்கிழமை அத்துமீறி நுழைந்த நான்கு பேருக்கு வனத் துறையினா் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
நீலகிரி மாவட்டம், சேரம்பாடி வனச் சரகம் சேரங்கோடு காவல் எல்லைக்கு உள்பட்ட கோட்டமலை வனப் பகுதியில் வனப் பணியாளா்கள் திங்கள்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, காப்புக் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பழைய தங்கக் குழிகளை சுற்றிப் பாா்த்துக் கொண்டிருந்த நான்கு பேரைப் பிடித்து விசாரித்தனா்.
இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரின் உத்தரவின்பேரில் காப்புக் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மோகன், சிவகுமாா், நதீம், முகமது நாசீக் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.