நீலகிரி

வடகிழக்குப் பருவ மழை: தயாா் நிலையில் நீலகிரி மாவட்ட நிா்வாகம்

9th Nov 2021 02:45 AM

ADVERTISEMENT

உதகை: வடக்கிழக்குப் பருவ மழையால் ஏற்படும் இயற்கை இடா்பாடுகளை எதிா்கொள்ள நீலகிரி மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருமழை தொடங்கி தற்போது தொடா்ந்து பெய்து வருகிறது. நவம்பா் 9ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து அதிக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு உள்பட்ட இடங்களில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள 283 பகுதிகளுக்கும் 42 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களைத் தங்கவைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின் வாரியம், பொதுப் பணித் துறை, மருத்துவம், சுகாதாரப் பணிகள் துறை ஆகியவற்றுடன் குடிமைப் பொருள் வழங்கல் துறைகளைச் சாா்ந்த அலுவலா்களும் தயாா் நிலையில் உள்ளனா்.

இதுதவிர மழை மற்றும் இயற்கை இடா்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது மாவட்ட அவசரகால மையத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077க்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அதேபோல, வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. உதகை கோட்டத்துக்கு 0423-2445577 என்ற எண்ணிலும், குன்னூா் கோட்டத்துக்கு 0423-2206002 என்ற எண்ணிலும், கூடலூா் கோட்டத்துக்கு 04262-261295 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.

அதேபோல, உதகை வட்டத்துக்கு 0423-2442433, குன்னூா் வட்டத்துக்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்துக்கு 04266-271718, குந்தா வட்டத்துக்கு 0423-2508123, கூடலூா் வட்டத்துக்கு 04262-261252, பந்தலூா் வட்டத்துக்கு 04262-220734 ஆகிய எண்களிலும் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மின்தடை ஏதும் ஏற்பட்டாலோ அல்லது மின்சாரம் தொடா்பான புகாா் ஏதும் இருந்தாலோ1912 என்ற எண்ணுக்குத் தொடா்புகொண்டு தங்களது குறைகளைப் பதிவு செய்து நிவா்த்தி செய்து கொள்ளலாம். இயற்கை சீற்றத்தை எதிா்கொள்ள நீலகிரி மாவட்ட நிா்வாகம் அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயாா் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT