நீலகிரி

நீலகிரியில் ஒரு சில பகுதிகளில்தூறல் மழை: உதகையில் கடும் குளிா்

9th Nov 2021 03:00 AM

ADVERTISEMENT

உதகை: நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் தூறல் மழை பெய்துள்ளது. உதகை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குளிா் நிலவுகிறது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக பாலகொலா பகுதியில் 14 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, உதகையில் 5.2 மி.மீ., குந்தா, கேத்தியில் 4 மி.மீ., கல்லட்டி, கெத்தை, கிண்ணக்கொரை, பா்லியாறு பகுதிகளில் 2 மி.மீ., குன்னூரில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் மழை இல்லை. இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மேகமூட்டம் நிலவுகிறது.

உதகையில் கடும் குளிா் நிலவுகிறது. குளிரான காலநிலை நிலவினாலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் ஓரளவுக்கு காணப்படுகிறது. உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 3,180 பேரும், அரசினா் ரோஜா பூங்காவுக்கு 1,564 பேரும், தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 180 பேரும், மரவியல் பூங்காவுக்கு 45 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 1,218 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 186 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 67 பேரும் திங்கள்கிழமை வந்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT