நீலகிரி

விநாயகன் யானையைப் பிடிக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினா் உண்ணாவிரதம்

2nd Nov 2021 12:08 AM

ADVERTISEMENT

கூடலூா்: மண்வயல் பகுதியில் குடியிருப்புகளையும், பயிா்களையும் சேதப்படுத்தி வரும் விநாயகன் யானையைப் பிடிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூடலூா் தோட்டமூலா பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலா் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மண்வயல் பகுதி நிா்வாகி தேவசியா தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் கோஷி பேபி உண்ணாவிரதத்தை துவக்கிவைத்தாா்.

இதில் குடியிருப்புகளையும், வேளாண் பயிா்களையும் தொடா்ந்து தேசப்படுத்தி, பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் விநாயகன் யானையைப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். இதில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT