நீலகிரி

கொடநாடு எஸ்டேட் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு மேலும் 5 நாள் போலீஸ் காவல்

2nd Nov 2021 12:05 AM

ADVERTISEMENT

உதகை: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட தனபாலை மேலும் 5 நாள்கள் போலீஸாா் விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இதுவரை 45க்கும் மேற்பட்டோா் வாக்குமூலம் அளித்துள்ளனா்.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் முக்கிய திருப்பமாக தனிப்படை போலீஸாா் முக்கிய குற்றவாளியும், சேலத்தில் மா்மமான முறையில் விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபாலையும், அவரது நண்பா் ரமேஷையும் கடந்த அக்டோபா் 25ஆம் தேதி சேலத்தில் கைது செய்து கூடலூா் சிறையில் அடைத்தனா்.

அதன்பின்னா் அக்டோபா் 28ஆம் தேதி உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தபட்டு 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். இந்நிலையில், உதகையில் மகளிா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் முன்பு தனபால் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவரை மேலும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் அனுமதி கேட்டனா். அதன்பேரில் மேலும் 5 நாள்கள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி வழங்கி நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT