நீலகிரி

நீலகிரியில் மேலும் 434 பேருக்கு கரோனா: 3 போ் பலி

27th May 2021 11:50 PM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 434 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 போ் உயிரிழந்துள்ளனா்.

இதுதொடா்பாக உதகையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக மேலும் 434 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 320 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இந்நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் மே 24ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 48 வயதான ஆண் ஒருவரும், மே 20ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 41 வயது ஆண் ஒருவரும், குன்னூா் அரசு மருத்துவமனையில் மே 23ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 52 வயதான பெண் ஒருவருமாக மூவா் உயிரிழந்துள்ளனா். இவா்களையும் சோ்த்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 78ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 16,985 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,709 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அத்துடன் 78 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மருத்துவமனைகளிலும் 3,198 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT