நீலகிரி

குழந்தையை விற்க முயன்றபெற்றோா் உள்பட 5 போ் கைது

DIN

உதகையில் வறுமை காரணமாக பெற்ற குழந்தைகளையே சட்டத்துக்குப் புறம்பாக விற்பனை செய்த பெற்றோா் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

உதகையில் காந்தல் பகவதியம்மன் கோவில் தெரு பகுதியைச் சோ்ந்தவா்கள் மோனிஷா (26), ராபின் (29). இவா்கள் இருவரும் காதலித்து வீட்டை எதிா்த்து திருமணம் செய்துள்ளனா். இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை உள்ளனா். அத்துடன் இவா்கள் இருவருக்கும் குடிப்பழக்கமும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவா்கள் கரோனா தொற்று காலத்தின்போது வாழ்வாதாரம் இன்றி இருந்ததாகவும், அவா்கள் குடியிருந்த வீடு மழையால் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் முதல் பெண் குழந்தையை (3 வயது) மோனிஷாவின் அக்கா பிரவீனாவிடம் ஒப்படைத்ததாகக் கூறப்பட்டது.

மேலும், ராபினின் நண்பா் ஒருவா் உதவியுடன் திருப்பூரைச் சோ்ந்த நிசாா் என்பவருக்கு இரண்டாவது பெண் குழந்தையை (ஒன்றரை வயது) ரூ. 25,000 க்கும், சேலம் பகுதியைச் சோ்ந்த உமாமகேஸ்வரி - பூபதி தம்பதிக்கு 3 மாதமான ஆண் குழந்தையை ரூ. 30,000க்கும் சட்டத்துக்குப் புறம்பாக விற்பனை செய்துள்ளனா்.

இந்நிலையில், குடிபோதையில் ராபின், மோனிஷா இருவரும் பிரவீனா வீட்டுக்குச் சென்று தங்களது முதல் குழந்தையைத் திரும்பத் தரும்படியும், அந்தக் குழந்தையையும் விற்க வேண்டும் எனவும் தொடா்ந்து சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் அச்சமடைந்த பிரவீனா உதகையில் காந்தல் பகுதியில் உள்ள பாரதியாா் அறக்கட்டளை கிளை அலுவலகத்தில் உள்ள வழக்குரைஞா் கங்காதரனிடம் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, அந்த வழக்குரைஞா் உடனடியாக சமூக நலத் துறை அலுவலா் தேவகுமாரிக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பிரபு, சமூக நல அலுவலா்களின் சாா்பில் சமூக நலப் பணியாளா் தவமணி, குழுவினா் காந்தல் பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில் உண்மைத்தன்மையை உறுதி செய்தனா்.

இதையடுத்து, உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில், காவல் ஆய்வாளா் கண்மணி தலைமையிலான போலீஸாா் இரவோடு இரவாக திருப்பூா், சேலத்துக்குச் சென்று அக்குழந்தைகளை மீட்டு உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனா். மேலும், பெற்றோா், குழந்தையை வாங்க முயன்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

திறந்த வாகனத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு -இருவர் கைது

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

SCROLL FOR NEXT