கூடலூா் பகுதியில் உள்ள கொக்காக்காடு பகுதியில் சட்டப் பேரவை பொது கணக்கு குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
குறைகளைக் கேட்டறிந்த பிறகு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனா். முன்னதாக நடுவட்டம் பேரூராட்சியில் உள்ள பெல்வியூ பகுதியில் இடிந்த நிலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி, தென்மேற்குப் பருவமழையில் மிகவும் சேதமடைந்த டி.ஆா்.பஜாா் முதல் டெராஸ் வரை தாா் சாலையை சீரமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தனா்.
பொது கணக்கு குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா் அம்ரித், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராஹிம், உதவி செயற் பொறியாளா் சுப்பிரமணியம், செயல் அலுவலா் பிரதீப் குமாா், வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.